அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் : -
- முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியப் பிரிவு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றிய விபரம் தேவை?
- முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டம்.
- ஓய்வூதியம் பெறுபவர் காசநோய் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுபவராய் இருப்பின் அவர்களுக்கு கூடுதலான நிதியுதவி வழங்கல்.
- ஓய்வூதியம் பெறுபவரின் ஈமச் சடங்கிற்கான நிதியுதவி வழங்கல்.
- முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டத்தினால் யாரெல்லாம் பயன்பெறலாம்?
- இத்திட்டத்தின் மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், திருமணமாகாத 40 வயதுக்கு மேற்பட்ட மகளிர் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் பயனடையலாம்.
- முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பயன்பெற அடிப்படை தகுதி என்ன?
- இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புபவருக்கு வயது 55 மேல் இருக்க வேண்டும்.
- விதவைகள் பயன்பெற என்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்?
- கணவரின் இறப்பு சான்றிதழினை வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
- கணவரால் கைவிடப்பட்டவர் பயன்பெற நிபந்தனை என்ன?
- ஏழு வருட காலத்திற்கு மேல் கணவரை பிரிந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.
- முதிர்கன்னிகள் பயன்பெற முக்கியமாக தேவைப்படும் தகுதிகள் என்ன?
- திருமணமாகாதவர்களாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
- இத்திட்டத்தின் மூலம் பயன்பெற திருநங்கைகள் வழி வகை செய்யப்பட்டுள்ளதா?
- ஆம். செய்யப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகள் பயன்பெறலாம்.
- இத்திட்டத்தின் விண்ணப்பப் படிவம் எங்கு வழங்கப்படுகிறது?
- அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர்க்கான பொதுவான விதிமுறைகள் என்ன?
- புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேல் வசிப்பவராகவும்,
- வருட வருமானம் ரூபாய் 75,000/- மிகாமல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய மற்ற ஆவணங்கள் எவை எவை?
- முதியோர்க்கான வயதினை உறுதிப்படுத்தும் சான்று (பிறப்பு, கல்வி மற்றும் திருமண சான்றிதழ்)
- விதவையெனில், கணவரின் இறப்பு சான்றிதழ்.
- கணவரால் கைவிடப்பட்டவர் எனில் விண்ணப்பத்துடன் இணைத்துள்ள நோட்டரி அபிடவிட் சான்றிதழ்,
- முதிர்கன்னி மற்றும் அரவாணிகள் எனில், விண்ணப்பத்துடன் இணைத்துள்ள பொருத்தமான சான்றிதழ்களை உரியவர்களால் பெறப்பட்டு இணைத்தல் வேண்டும் மற்றும்
- சான்றளிக்கப்பட்ட ரேஷன்கார்டு மற்றும் தேர்தல் அட்டை நகல்
- விண்ணப்பப்படிவத்தில் இணைத்துள்ள குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ்.
- விண்ணப்பப் படிவத்தில் இணைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்_பாராளுமன்ற_மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சான்றிதழ்.
- விண்ணப்பதாராரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
- விண்ணப்பப்படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- ஓய்வூதியம் மாதாமாதம் எந்தெந்த தேதிகளில் வழங்கப்பட்டு வருகிறது? ஒரு பயனாளிக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு?
- ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி முதல் வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
- 18-54 வயதுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னிகள் மற்றும்திருநங்கைகளுக்கு ₹ 1500/-, 55-59 வயதுள்ள முதியவர்களுக்கு ₹ 1500/-ம், 60-79 வயதுள்ள முதியவர்களுக்கு ₹ 2000/-ம் மற்றும் 80 & மற்றும் அதற்கு மேல் வயதுள்ள முதியவர்கள் ₹ 3000/-ம் வழங்கப்படுகிறது
- காசநோய் (டி.பி.) மற்றும் புற்று நோயால் (கேன்சர்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏதேனும் கூடுதலான நிதியுதவி வழங்கப்படுகிறதா?
- ஆம்.வழங்கப்படுகிறது. மாதந்தோறும் அவர்கள் பெறும் ஓய்வூதியத்துடன் சேர்த்து கூடுதலாக ₹ 500/- வழங்கப்படுகிறது.
- மேற்கூறிய நோயால் பாதிக்கப்படுபவர் கூடுதலான நிதியுதவி பெறுவதற்கு என்ன விதிமுறைகள் உள்ளது? விண்ணப்பிப்பது எப்படி?
- காசநோய் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் இத்துறை மூலம் இதற்கென இலவசமாக வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தில்தான் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனை (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையின் உரிய அதிகாரம் பெற்ற மருத்துவரின் ஒப்புதல் பெற்ற மருத்துவ சான்றிதழினை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
- ஓய்வூதியம் பெறுபவரின் ஈமச்சடங்கிற்கான நிதியுதவி திட்டம் பற்றிய விளக்கம் தேவை?
- இத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் பெறுபவரின் ஈமச்சடங்கிற்கான நிதியுதவி ₹ .5000/- வழங்கப்பட்டு வருகிறது.
- ஓய்வூதியம் பெறுபவரின் ஈமச்சடங்கிற்கான நிதியுதவி பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் ?
- அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை பெற்று இறந்தவரின் ஒரிஜினல் பென்ஷன் புத்தகம், ஒரிஜினல் இறப்பு சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரர்தான் ஈமச் சடங்கினை செய்தவர் என்பதற்கான ஆதார சான்றிதழ்கள், நகல்களுடன் மற்றும் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர், சட்டமன்ற உறுப்பினர், கெஜடட் அதிகாரி சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஓய்வூதியம் பெறுபவரின் ஈமச்சடங்கிற்கான நிதியுதவி பெறும் விண்ணப்பத்தில் மேலும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
- ரேஷன்கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டை நகல்கள்.
- உறவுமுறை ஆதார நகல்கள், இல்லையெனில் கெஜடட் அதிகாரி , சட்டமன்ற உறுப்பினர் சான்றிதழ்.
- வங்கி பாஸ்புக் நகல்கள்.
- ஓய்வூதியம் பெறுபவரின் ஈமச்சடங்கிற்கான நிதியுதவி பெறும் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன?
- விண்ணப்பதாரர் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது
- பென்ஷன்தாரர் இறந்த தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறினாலும்,
- பென்ஷன்தாரர் இறக்கும் முன்புவரை 3 மாதத்திற்கு மேல் பென்ஷன் தொகை பெறவில்லை என்றாலும் அரசு ஆணைப்படி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
- மகளிர் மேம்பாடு பிரிவு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றிய விபரம் தேவை?
- விதவை பெண்களின் மகளுக்கு திருமண உதவி
- விதவை மறுமணத்திற்கு ஊக்கத்தொகை
- வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மணப்பெண்ணின் திருமணத்திற்காக உதவித்தொகை
- ஒரு/இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட குடும்பத்திற்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை
- ஏழை பெற்றோர்களின் குடும்பத்தில் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரே பெண் குழந்தைக்கு உதவித்தொகை
- பணிபுரியும் மகளிர்/ மாணவியர் விடுதி
- குடும்ப நல ஆலோசனை மையம்
- குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்
- வரதட்சணை ஒழிப்பு சட்டம்
- பணியிடங்களில் மகளிருக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை விசாரிக்க புகார் குழு
- விதவை பெண்களின் மகளுக்கு திருமண உதவித்தொகை பெற தகுதிகள் என்ன?
- மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.
- மணமகளுக்கு இதுவே முதலாவது திருமணமாகஇருத்தல் வேண்டும்.
- விதவை மறுமணத்திற்கு ஊக்கத்தொகை பெறுவதற்கு என்ன அடிப்படை தகுதி வேண்டும் ?
- மணமகன் திருமணம் ஆகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராதவோ இருத்தல் வேண்டும்.
- வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மணப்பெண்ணின் திருமணத் திட்டத்தில் பயன்பெற நிபந்தனை என்ன?
- திருமணம் சட்ட திட்டத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை திருமணத்திற்கு 30 நாட்கள் முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
- மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.
- ஒரு பெண் குழந்தை/இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட குடும்பத்திற்கு அளிக்கப்படும் உதவித்தொகை பயன்பெற முக்கியமாக தேவைப்படும் தகுதிகள் என்ன?
- பெற்றோரில் யாராவது ஒருவர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்திருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கு ஒன்று (அல்லது) இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருத்தல் வேண்டும்.
- திருமணத்தின்போது மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.
- இருபாலருக்கும் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ₹.75000/- மிகாமல் இருக்க வேண்டும்.
- ஏழைப்பெற்றோர்களின் குடும்பத்தில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் ஒரே பெண் குழந்தைக்கு எவ்வளவு நிதியுதவி வழங்கப்படுகிறது?
- இத்திட்டத்தில் ₹.25,000/- மட்டும் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அப்பெண் குழந்தை 18 வயது நிறைவுற்ற பின் வட்டியுடன் கூடிய முதிர்வுத்தொகை அளிக்கப்படும்.
- வரதட்சணை புகார் சம்பந்தமாக அலுவலகத்தில் யாரை அணுக வேண்டும் ?
- சம்பந்தப்பட்ட பிராந்தியத்தின் வரதட்சணை தடுப்பு அதிகாரியை அணுக வேண்டும். இத்துறையில் பணிபுரியும் கீழ்கண்ட அதிகாரிகளை வரதட்சணை தடுப்பு அதிகாரிகளாக அரசு நியமித்துள்ளது.
- துணை இயக்குனர் (மகளிர் நலம்) – புதுவை பிராந்தியம்
- குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி – காரைக்கால்
- நிர்வாக அதிகாரி – மாகே/ஏனாம்
- இத்துறையின் இயக்குனர், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வரதட்சணை தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் சம்பந்தமாக அலுவலகத்தில் யாரை அணுக வேண்டும் ?
- குடும்ப வன்முறை தடைச்சட்டத்தின் கீழ் இத்துறையினைச் சேர்ந்த கீழ்கண்ட அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி I – வில்லியனூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகள்.
- குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி III –அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகள்.
- குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி IV – புதுச்சோரி நகராட்சி பகுதி.
- குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி V – உழவர்கரை நகராட்சி பகுதி.
- குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி II – காரை பகுதி முழுவதும்.
- நல அதிகாரி, மாகே – மாகே பகுதி முழுவதும்.
- நல அதிகாரி, ஏனாம் – ஏனாம் பகுதி முழுவதும்.
முந்தைய பக்கத்திற்குத் திரும்புக | பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 24-01-2020